ஈரோடு மாநகர் மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி கொடுமுடி ஒன்றியம் கொளத்துப்பாளையம் ஊராட்சி சேர்ந்த 2011 ஆம் ஆண்டு திமுக ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் துரைசாமி மற்றும் 10 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் மாநகர் மாவட்ட செயலாளர்,முன்னாள் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான திரு வி.பி.சிவசுப்பிரமணி முன்னிலையில் இணைந்து கொண்டனர்
மேலும் இந்நிகழ்வில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் திரு பேட்டை சின்னு, ஒன்றிய கவுன்சிலர் ராணி பழனிச்சாமி, கொடுமுடி ஒன்றிய கவுன்சிலர் பரமசிவம், முன்னாள் மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் அப்பு (எ) குணசேகரன் ஆகியோர் தலைமையில் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கிளைக் கழகச் செயலாளர்கள் வசந்த சுப்பிரமணியம், விஸ்வநாதன் , திருமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment