கொங்கு வேளாளர் தொழில்நுட்பக்கல்வி அறக்கட்டளை சார்பில், கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, கொங்கு பொறியியல் கல்லூரி, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொங்கு தனியார் தொழில் பயிற்சி நிறுவனம், கொங்கு நேஷனல் மெட்ரிக் பள்ளி, கொங்கு கட்டிடக் கலைக் கல்லூரி, கொங்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி ஆகிய 7 கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில் ஒவ்வொரு ஆண்டிலும் படிப்பில் சிறந்து விளங்கும் 5% மாணவர்களுக்கு இப்பரிசுத்தொகை வழங்கப்ப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஆர்.எல்.ரமேஷ் ராம் ஐஆர்எஸ், தலைமை விஜிலென்ஸ் அதிகாரி, ஐஆர்இஎல், அணுசக்தித்துறை, பிரதமர் அலுவலகம், இந்திய அரசு அவர்கள் இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் 1 கோடி அளவிலான பரிசுத்தொகையினை 598 மாணவர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஆர். குமாரசாமி செயலாளர் திரு பி.சத்தியமூர்த்தி, பொருளாளர் திரு கே.வீ.ரவிசங்கர், அனைத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், அறக்கட்டளையின் பாரம்பரிய நிறுவனங்களின் உறுப்பினர்கள், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment