தலித் விடுதலைக்கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 14 April 2023

தலித் விடுதலைக்கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


ஈரோடு மாவட்டத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் 132வது பிறந்தநாளில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் தலித் விடுதலைக்கட்சி ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் மற்றும் மாநில அமைப்பாளர் வெ.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. 


ஈரோடு மாவட்ட அமைப்பாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். தலித் விடுதலைக் கட்சி சமூக விடுதலைப் போராளி ஐயா டாக்டர் M.P.செங்கோட்டையன், B.E., D.SS. மாநில பொது செயலாளர் அவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 



பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசியபோது அருந்ததியர்களுக்கு 3% இடஒதுக்கீட்டை 6% சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்பு ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகம், 12 பொருள் கொண்ட கல்வி உபகரணங்கள் 100 பேருக்கு வழங்கினார். 


உடன் தலித் விடுதலைக்கட்சியின் இணை பொது செயலாளர் சகுந்தலா தங்கராஜ் அவர்கள், இரா.மூர்த்தி தலைமை நிலை செயலாளர், ஊத்துக்குளி செல்வம் மேற்கு மண்டல செயலாளர் கோபி சித்ரா, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் மகேஸ்வரி, திருப்பூர் மாவட்ட செயலாளர் பூங்கொடி,  கரூர் மாவட்ட செயலாளர் சரஸ்வதி. நாச்சிமுத்து, திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மூர்த்தி, ஜெகன் தலைமை நிலை துணை செயலாளர் மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment