நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனியார் பள்ளிகளை மிஞ்சுகிற அளவில் கொடுமுடி வட்டார பகுதியில் ஷன்மதி என்கிற மாணவி489 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார், கணக்கு மற்றும் அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இரண்டாம் இடம் எஸ்.வி.கிரண்யா என்ற மாணவி 480 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார், யோகேஸ்வரி என்கிற மாணவி 475 மதிப்பெண் பெற்று பள்ளியில் மூன்றாவது இடம் பெற்றுள்ளார், அதுபோல தமிழ் பாடத்தில் இரண்டு மாணவிகள் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர், ஆங்கில பாடத்தில் மூன்று பேர் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்றதை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் வெகுவாக பாராட்டி தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி உருவாகி இருக்கிறது என்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரிய பெருமக்கள், மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், மற்றும் நிர்வாக குழு, பள்ளி மேலாண்மை குழு அனைவருக்கும் படிக்கின்ற மாணவிகளின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆறுமுகம் கூறுகையில் சென்ற கல்வி ஆண்டை விட இந்த ஆண்டு மாணவிகள் மிகச் சிறந்த மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அனைத்து மாணவிகளுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து இந்த ஆண்டு மாணவிகளின் சேர்க்கை இன்னும் அதிகமாகும் என கூறினார்.
No comments:
Post a Comment