ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஈரோடு, சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய அரசினை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் திரு. வி. சி.வேதானந்தம் அவர்கள் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல், அணி பிரிவு தலைவர்கள் கலந்துகொண்டு கட்சியின் சார்பில் தங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக பூபாலன்
No comments:
Post a Comment