ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ளஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலின் அறக்கட்டளை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஸ்ரீ ஐய்யனார் கோவில் தர்மகர்த்தாவும், ஸ்ரீ ஐய்யனார் கோவில் அறக்கட்டளை தலைவருமான K. லோகநாதன் தலைமையேற்று கூட்டத்தை நடத்தினார்.
இக்கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர் ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவில் அறக்கட்டளை தலைவராக மீண்டும் ஒரு மனதாக K. லோகநாதன் நியமிக்கப்பட்டார், துணைத் தலைவராக A.செந்தில்குமார் செயலாளராக புவியரசு இணைச் செயலாளராக சோமசுந்தரம் பொருளாளராக சிவகுமார் தணிக்கை குழு உறுப்பினராக P.ரத்தினசாமி செயற்குழு உறுப்பினராக கணேசன் ரகுபதி புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். சிவகுமார்,காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து கோவில் திருப்பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment