பவானிசாகர் அணையில் ரசாயன கழிவுகள் கலப்பதை ஆய்வு மேற்கொண்டார் அ.பண்ணாரி எம் எல் ஏ.!!! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 15 May 2023

பவானிசாகர் அணையில் ரசாயன கழிவுகள் கலப்பதை ஆய்வு மேற்கொண்டார் அ.பண்ணாரி எம் எல் ஏ.!!!


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் அணையில் ரசாயன கழிவுகள் கலப்பதை ஆய்வு மேற்கொள்வதற்காக  பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி நேரில் பவானிசாகர் அணை பகுதிகளில் அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

அணை நீரில் ரசாயன கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதப்பதாலும்  குடிநீரில் ரசாயனம் கலந்த நீர் சென்று வருவதால் அதை தடுக்க உடனடியாக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு ரசாயன களிவை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டார். ஆய்வின் போது அரசு அதிகாரிகள், அஇஅதிமுக நிர்வாகிகள் பவானிசாகர் பேரூர் செயலாளர் கே.செல்வம், பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் டி.எஸ்.பழனிச்சாமி, பவானிசாகர் சரவணன், வழக்கறிஞர் கே.எஸ்.வெற்றிவேல், குமரேசன், சத்தி நகர அம்மா பேரவை இணை செயலாளர் எஸ்.டி.காமேஷ், பூஜித் மற்றும் பலர் ஆய்வின் போது உடனிருந்தனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண்:- 9965162471 , 6382211592 

No comments:

Post a Comment