ஈரோட்டில் பத்து ரூபாய்க்கு அளவில்லா உணவு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 May 2023

ஈரோட்டில் பத்து ரூபாய்க்கு அளவில்லா உணவு.


ஈரோட்டில் பிரப் சாலையில் புதிதாக பத்து ரூபாய்க்கு கட்டணத்தில் ஆற்றல் உணவகம் துவங்கப்பட்டிருக்கிறது இங்கு காலை மதியம் இரவு என மூன்று நேரத்திலும் திருப்தியான உணவு வகைகள் கொடுக்கப்படுகிறது பத்து ரூபாய் கட்டணத்தில் பொதுமக்களுக்கு பசியாற தரமான உணவை வாரம் 7 நாட்களும் இங்கு உணவு கிடைக்கும் இங்கு ஒரே நேரத்தில் 60 பேர் அமர்ந்து சாப்பிடலாம் காலை 08 மணி முதல் 10 மணி வரை இட்லி சாம்பார் மற்றும் சட்னி, மதியம் சாம்பார் சாதம் பொரியல் மோர் மற்றும் இரவு இட்லி சாம்பார் மற்றும் சட்னி என உணவுகள் இங்கு கிடைக்கும்.


இந்த உணவகத்தை உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் குருமகன் துவக்கி வைத்தார், ஆற்றல் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார் மற்றும் சிறப்பு அழைப்பாளராக மொடக்குறிச்சி சட்டமன்றத் உறுப்பினர் சி.கே.சரஸ்வதி, அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஈரோட்டில் இது போன்ற பத்து ரூபாய்க்கு உணவு கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏழை எளிய பொதுமக்கள் இவ் உணவகத்தை வரவேற்கின்றனர். 

No comments:

Post a Comment