சி.ஐ.டி.யு.நடத்தும் நடைப்பயண பிரச்சார இயக்க 13 அம்ச கோரிக்கைகளை அவர்கள் கூறியதாவது குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க மாநில அரசும், ஒன்றிய பாஜக அரசும் சட்டம் இயற்ற வேண்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், நிரந்தரத் தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறையை தடை செய்யவேண்டும் தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்.
தொழிலாளர் நலன் பாது காக்கும் வகையில் முத்தரப்பு களை செயல்படுத்தவேண்டும், தொழி லாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும், மோட்டார் வாகன சட்ட திருத் தம், மின்சார விநியோக சட்ட திருத்தம் 2022 திரும்பப் பெறவேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணிகளை நிரப்ப வேண்டும், மக்களை தேடி மருத்துவம், என்சிபி எல்பி போன்ற திட்ட ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இச்சந்திப்பில் மாவட்ட, வட்ட நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், துறை வாரி சங்க நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment