ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் இன்று 27/05/2023 காலை 11 மணிக்கு முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாள் அஞ்சலியை ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி.திருச்செல்வம் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில துணைத் தலைவர் எம்.ஜவஹர் அலி, மாவட்டத் துணைத் தலைவர் எம் ஆர் அரவிந்தராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ. மாரியப்பன் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.ஆர். ராஜேந்திரன் முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஜூபைர் அகமது ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத்,மாவட்ட பொது செயலாளர் இரா.கனகராஜன், இரண்டாம் மண்டல துணைத் தலைவர் ராஜாஜிபுரம் வெற்றிச்செல்வன்,அயூப் கான், பிராமண பெரிய அக்ரஹாரம் மௌபிக், நரிப்பள்ளம் ரவிச்சந்திரன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment