மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி மூலம் செயல்படுத்தப்படும் பணிக்கு பூமி பூஜை செய்தல் நிகழ்வு. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 17 May 2023

மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி மூலம் செயல்படுத்தப்படும் பணிக்கு பூமி பூஜை செய்தல் நிகழ்வு.


ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, வடுகபட்டி பேரூராட்சி, வார்டு என். 14, ஜெயராமபுரம் காலனியில் சுகாதார வளாகம் அமைத்திட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் (2022-2023) இருந்து சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை  நடைபெற்றது. நடைபெற்ற நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி  கலந்துகொண்டு சுகாதார வளாகம் அமைப்பதற்கான பணிகளை துவக்கி வைத்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் குணசேகர், மாவட்ட விவசாய அணி செயற்குழு உறுப்பினர் ராமநாதன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் செங்கோட்டையன், மாவட்ட விவசாய அணி செயற்குழு உறுப்பினர் தாமோதரன், முன்னாள் மாவட்ட விவசாய அணி தலைவர் வக்கீல் சண்முகசுந்தரம், முன்னாள் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு பிரிவு தலைவர் ஐயப்பன், மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் யுவராஜ், மகளிர் அணி ஒன்றிய துணைத் தலைவர்கள் பிரேமாவதி, குணசித்ரா மற்றும் கட்சியின் நிர்வாகிகள், வடுகபட்டி பேரூராட்சி தலைவர், பேரூராட்சி செயல் அலுவலர், உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment