ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுடி பேரூராட்சி, வார்டு எண் - 8, நகப்பாளையத்தில் அங்கன்வாடி மையம் அமைத்திட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் (2021-2022) இருந்து சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் முடிவடைந்து அங்கன்வாடி மையம் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. நடைபெற்ற நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்துகொண்டு அங்கன்வாடி மைய கட்டிடத்தை குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள் . அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் பி சி ராமசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கொடுமுடி கிழக்கு ஒன்றிய தலைவர் வக்கீல் கார்த்திகேயன், விவசாய அணி மாவட்ட செயலாளர் மாருதி செல்வராஜ், பேரூர் தலைவர் ரவி, ஒன்றிய துணைத் தலைவர்கள் பாண்டித்துரை, விஜயகுமார், ஒன்றிய செயலாளர் ஹரிஷ், ஒன்றிய தொழில் பிரிவு அணி தலைவர் ஒத்தக்கடை லேத் குமார், கணபதிபாளையம் பூத் கிளைத்தலைவர் நித்தியானந்தம், நகப்பாளையம் குணசேகரன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், அஇஅதிமுக நிர்வாகிகள், கொடுமுடி பேரூராட்சி தலைவர், பேரூராட்சி செயல் அலுவலர், அங்கன்வாடி மைய ஆசிரியர்கள், பணியாளர்கள், உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோருடன் அறம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கிருத்திகா சிவ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment