அதன்படி, இன்றைய திளம் (04.05.2023) காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், நெடுஞ்சாலைத்துறையின் (நபார்டு மற்றும் கிராமசாலைகள் கோட்டம்) சார்பில் பகவபட்டி ஊராட்சியில் ரூ.4.66 கோடி மதிப்பீட்டில் பூச்சக்காட்டுவலசு சாலை முதல் ஒட்டவலசு இணைப்பு சாலை வரையிலான சாலையினை மேம்படுத்தும் பணியும் மற்றும் எல்லைக்கிராமம் ஊராட்சியில் ரூ.6.38 கோடி மதிப்பீட்டில் புதுப்பாளையம் நொய்யல் சாலை முதல் பொன்னம்குட்டை சாலை (வழி) மேட்டூர் இளைகுமாரபாளையம் சாலை வரையிலான சாலையினை மேம்படுத்தும் பணி என மொத்தம் ரூ.11.04 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ளும் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டு வர வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநராட்சி 4-ம் மண்டல குழுத் தலைவர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் திரு.சிவராஜ், உதவி பொறியாளர் திருமதி,அன்பரசி, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.காயத்திரி இளங்கோ, சென்னிமலை பேரூராட்சித் தலைவர் திருமதி ஸ்ரீதேவி, பெருந்துறை வட்டாட்சியர் (பொ) திருமதி.அமுதா, சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment