ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது !!! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 31 May 2023

ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது !!!


ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம் பட்லூர் கிராமம் எண்ணியம்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கும்பாபிஷேக விழாவிற்கு தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார் மற்றும்  நிர்வாகிகள் இடம் கோவில் விழா கமிட்டி  பெரியோர்கள்,  நாமக்கல் மாவட்ட நிர்வாகி கிருஷ்ணகுமார்  தலைமையில் விழா அழைப்பிதழை  வழங்கி   தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறவுகளையும் தவறாமல் வருமாறு அன்போடு அழைப்பு விடுத்தனர். 


இந்நிகழ்ச்சியில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர்  கணேஷ், மாநில உயர்மட்டக்குழு ஆலோசகர் செழியன், மாவட்ட நிர்வாகி திருப்பூர் தீபன், திங்களூர் ராஜ் மோகன், சரவணன், மகளிர் அணி சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 


- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர்  சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment