ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுங்கர இ.ஆ.ப. நேரில் சந்தித்து பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் அ.பண்ணாரி வழங்கினார். அனைத்து மனுக்களின் மீதும் உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பவானிசாகர் எம்எல்ஏ வலியுறுத்தினார்.
மனுக்களை பெற்றுக் கொண்ட ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். நிகழ்வின் போது சத்தியமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.எம்.எஸ். நாச்சிமுத்து, வாத்தியார் துரைசாமி, வழக்கறிஞர் வெற்றிவேல், சத்தி நகர அம்மா பேரவை இணை செயலாளர் காமேஷ், சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment