ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கொமாரபாளையம் ஊராட்சி, சிவியார்பாளையத்தில் தனி நபர் குடும்ப பட்டா நிலத்துடன் இணைந்த அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததால், அப்பகுதியை சார்ந்த பொதுமக்களுக்கு வழிதடப்பிரச்சனை ஏற்படுவதாகவும், அரசு நிலத்தைஆக்கிரமிப்பை அகற்றி, வீடற்ற ஏழை மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க, நில அளவீடு செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் சார்பாக கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் தலைமையில், சத்தி வட்டாச்சியர் அலுவலகத்தில், தலைமையிடத்து, துணை வட்டாச்சியர் சாமுண்டீஸ்வரியிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுகொண்ட துணை வட்டாச்சியர், சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக தெரிவித்தார். மனு அளித்தபோது உடன் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரமேஷ், ஊராட்சி உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, பொதுமக்கள் இருந்தனர்.
- தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண்:- 9965162471 , 6382211592
No comments:
Post a Comment