ஈரோடு மாநகராட்சி சார்பில் மாநகர் பகுதிகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதால், விபத்து ஏற்படாத வண்ணம் குழியை சுற்றிலும் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மிக குறுகிய நிலையில் காணப்படும் இந்த சாலையை கடக்க முடியாமல், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இந்த பகுதியில் ஜவுளி கடைகள், தங்க நகை கடைகள் என பல்வேறு முக்கிய கடைகள் உள்ளதன் காரணமாக, வாகன போக்குவரத்து சற்று அதிகரித்து காணப்படும் என்பதால், இதுபோன்ற திட்ட பணிகளை விரைந்து முடித்து, சாலையை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment