இதனையடுத்து ஒற்றை யானையை பாதுகாப்பாக விரட்ட வனத்துறையினர் கிராமமக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுத்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அடசப்பாளையம் பகுதியில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த ஏரங்காட்டூர் பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி துரை என்கிற சித்தேஸ்வரனை விவசாய தோட்டத்தில் புகுந்து முகாமிட்டிருந்த யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இதுகுறித்த தகவல் அறிந்த வனத்துறையினர் பங்களாபுதூர் காவல்துறையினர் கூலி தொழிலாளியான சித்தேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து கேட்டறிந்த அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் மருத்துவமனைக்கு நேரில் விரைந்து சித்தேஸ்வரனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார், இதனைதொடர்ந்து யானை தாக்கி உயிரிழந்த கூலிதொழிலாளி சித்தேஸ்வரன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.5 இலட்சம் நிவாரண தொகையில் முன்தொகையாக ரூ.50 ஆயிரத்தை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் வனத்துறை சார்பில் வனசரகர் உத்திரசாமி நேரில் வழங்கினர்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினரிடம் யானை தாக்கி உயிரிழந்த சித்தேஸ்வரின் மனைவி அழகியம்மாள் தனது மகன் பிரதீப், மகள் புவனேஸ்வரிக்கு அரசின் வேலை வாய்ப்பு உதவி கிடைக்க வேண்டி கதறி அழுதபடி கூறினார் அழகியம்மாளின் கோரிக்கையை அரசின் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று வேலை வாய்ப்பிற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
- மாவட்ட செய்தியாளர்.என்.நரசிம்ம மூர்த்தி.செல் -9789734920.
No comments:
Post a Comment