முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வட்டார அளவிலான மையக்குழு உறுப்பினர்கள் முதல் கட்ட ஆலோசனை கூட்டம்!! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 May 2023

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வட்டார அளவிலான மையக்குழு உறுப்பினர்கள் முதல் கட்ட ஆலோசனை கூட்டம்!!


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,  தமிழ்நாடு  மாநில ஊரக நகர் புற வாழ்வாதார இயக்கம் ஈரோடு மாவட்டம் முதலமைச்சரின்  காலை உணவு திட்டம் வட்டார அளவிலான மையக்குழு உறுப்பினர்களுக்கான முதல் கட்ட ஆலோசனைக் கூட்டத்தை அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நேரு நகர் சமுதாயக்கூடத்தில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே. சி. பி. இளங்கோ  குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 

இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சு. பிரேம்குமார் ,  துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மற்றும் மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் இந்திரா. B.M.M.மற்றும்.வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்,  கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர்,  எஸ்.எம்.சரவணன், சிக்கரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர் சுப்பிரமணியம், மற்றும்  ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் காலை சிற்றுண்டி அமைப்பாளர்கள், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


- தமிழக குரல்  செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி தொலைபேசி எண்:- 9965162471 , 6382211592 

No comments:

Post a Comment