மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கே.என். பாட்ஷா கோரிக்கை கடிதம். - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 May 2023

மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கே.என். பாட்ஷா கோரிக்கை கடிதம்.

ஈரோடு  மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணை தலைவரும், முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினரான கே.என்.பாஷா அவர்கள் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை ரயில்வே துறையில் மத்திய அரசு நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்வை அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தில் கன்னியாகுமரியில் இருந்து புனே வரை செல்லும் ரயிலை மும்பை வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இதனை தொடர்ந்து கோவையிலிருந்து தென் மாவட்டம் தூத்துக்குடிக்கு புதிய ரயில் இயக்க வேண்டுமாறும், அதனை தொடர்ந்து கொடுமுடி ரயில் நிலையத்தில் நான்கு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு தனது கடிதத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். 

வண்டி எண்.16382 (ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ்) கன்னியாகுமரி to மும்பை வரை கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ரயிலை கொரனா காலத்தில் புனே வரை இயக்கினார்கள். தற்சமயம் தொடர்ந்து புனே வரை தான் இயக்கப்படுகிறது. இந்த ரயில் புனோவுக்கு இரவு 10.20 மணிக்கு செல்கிறது. அதற்கு பிறகு மும்பை செல்ல பயணிகள் இரவு நேரத்தில் மும்பைக்கு டிக்கெட் எடுத்து தங்களது உடமைகளையும், குழந்தைகளையும் லக்கேஜ்களையும் எடுத்து கொண்டு அலைய வேண்டிய நிலை உள்ளது. இந்த வண்டி கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு கேரளா மார்க்கமாக வந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக திருப்பதி, மந்தராலயம் ரோடு வழியாக சோலப்பூர், புனே, கல்யாண் வழியாக மும்பை CST வரை இயங்கி வந்தது. 

பயணிகளுக்கு மிகவும் சௌகரியமாக இருந்தது. வேறு எந்த ரயில் வசதியும் மும்பை செல்ல இல்லை. இந்த ரயில் புனே வரை இயக்குவதால் பயணிகள் அங்கிருந்து 4 மணி நேரம் மும்பை செல்ல வேறு ரயில்களைகூட்ட நெரிசலில் சிக்கி மிகவும் சிரமமாக உள்ளது. ஆகவே பயணிகள் நலன் கருதி இந்த ரயிலை தொடர்ந்து மும்பை வரை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சார்பில் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.


வண்டி எண்.22668 கோயம்புத்தூரிலிருந்து நாகர்கோவில் வரை இயக்கி கொண்டு இருந்த ரயிலில் வண்டி எண்.22669 கோவை to தூத்துக்குடி வரை லிங்க் எக்ஸ்பிரஸ் இணைப்பு ரயில் கொரனா பெருந்தொற்று காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இதுவரை இயக்கபடாமல் ரயில்வே நிர்வாகம் காலம் கடத்தி வருகிறது. தென் மாவட்ட மக்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை நான்கு மாநகராட்சி பயணிகள் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.இவை அனைத்திற்கும் விரைந்து நல்லதொரு தீர்வு காண வேண்டுமாறு  மத்திய அரசை    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணை தலைவர் கே. என். பாஷா தெரிவித்துள்ளார் 

No comments:

Post a Comment