ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட தாசரிபாளையம் பெருமாள் கோவில் வீதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணியை கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். சரவணன் துவக்கி வைத்தார்.
உடன் கொமராபாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பெரியசாமி, வடிவேலு மற்றும் தாசரிபாளையத்தை சேர்ந்த ரமேஷ், மாதேஷ் மற்றும் பலர் உடன் உள்ளனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment