கபாடி தொடர் போட்டியில் கலந்து கொண்ட கபாடி வீரர்களுக்கு நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் சிறப்பு பரிசு வழங்கினார் !!! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 June 2023

கபாடி தொடர் போட்டியில் கலந்து கொண்ட கபாடி வீரர்களுக்கு நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் சிறப்பு பரிசு வழங்கினார் !!!


ஈரோடு மாவட்டம்,  நம்பியூர் ஒன்றியம்,  எலத்தூர் பேரூராட்சி தெற்குப்பதி கிராமத்தில் டிகே ராயல்ஸ் கபாடி குழு நடத்தும் நான்காம் ஆண்டு கபாடி தொடர் போட்டியில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்.விஸ்வநாதன் நாடார்  கலந்து கொண்டு கபாடி வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கினார். 


இந்நிகழ்ச்சியில் கொங்கு மண்டல துணை ஒருங்கிணைப்பாளர் பொன்மணி, மாநில இளைஞரணி செயலாளர் வாசுதேவன், மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் சிவக்குமார்,  மாநில நிர்வாகி கலை,  மாவட்ட நிர்வாகிகள் சின்னசாமி, புகையிலை கொமரசாமி, ஒன்றிய நிர்வாகி சிதம்பரம், மற்றும்  லோகு டிஜிட்டல் உரிமையாளர் கே.லோகநாதன்  மற்றும் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் தெற்குப்பதி நிர்வாகிகள்,  உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள். 


மேலும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டத்திலிருந்தும் 60க்கும் மேற்பட்ட  கபாடி அணியினர் கலந்து கொண்டு விளையாடினார்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை தெற்குப்பதி டிகே.ராயல்ஸ் நிர்வாகிகள்,  உறுப்பினர்கள்  சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 

No comments:

Post a Comment