தென்னகத்தின் காசி என அழைக்கப்படும் ஈரோடு காங்கேயம் சாலையில் ராட்டைசுற்றிபாளையத்தில் உலகிலேயே அதிக உயரம் கொண்ட 39 அடி உயர கால பைரவர் முகப்பு சிலையுடன் கூடிய கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை பிரதி மாதம் நடைபெறும் 62 பைரவர்கள் கோயிலை சுற்றி புடைசூழ மிகவும் நேர்த்தியாக கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
காசியை போன்று தத்ரூபமான இயற்கையான சூழலில் கோயில் அமைந்துள்ளது இங்கு வழிபட்டால் காசியில் வழிபட்டதற்கு சமம் என்பதினால் தேய்பிறை அஷ்டமி பூஜையில் சுற்று வட்டார மக்கள் மட்டுமின்றி வெளியூரிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காலபைரவரின் அருளாசி பெற்றனர்.
No comments:
Post a Comment