ஈரோட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை துவக்கி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கினார் அமைச்சர் சு. முத்துசாமி. - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 17 October 2023

ஈரோட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை துவக்கி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கினார் அமைச்சர் சு. முத்துசாமி.


ஈரோடு மாவட்டம், வெள்ளோடு, ஸ்ரீதேவி திருமண மண்டபத்தில் (17.10.2023) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், 70 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை துவக்கி வைத்து, சீர்வரிசை பொருட்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா இஆப, அவர்கள் தலைமையில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் வழங்கினார்.

இவ்விழாவில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் வாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், அரசுப்பள்ளிகளில் தொடக்கக்கல்வி பயிலும் அனைத்து மாணவு, மாணவியர்களுக்கும் காலை உணாவு திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், நாள் முதல்வன் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். 


அதிலும், குறிப்பாக பெண்களின் நலனுக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், பெண் கல்வியினை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களும் இதற்கெல்லாம் சிறப்பு சேர்க்கின்ற வகையில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் உள்ள சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிர் மாதம்தோறும் பயனடையும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தினை கடந்த செப்டம்பர் 15-ஆம் நாள் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று துவக்கி வைத்துள்ளார்கள்.


மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அனைத்துத்துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், துறைவாரியாக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்தும் தொடர்ந்து கேட்டறிந்து அதனை சிறப்பான முறையில் செயல்படுத்துமாறு அறிவுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் கர்ப்பணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தொர்ந்து நடைபெற்று வருகிறது. 


ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது. இதனை மனதிற்கொண்டு கர்ப்பிணிப் பெண்கள், கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால்தான், அவர்களுக்கு பிறக்கும். குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும். வசதிவாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும் நன்மையும் கிடைக்காமல், அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்பட கூடாது என்ற தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டம் இந்த சமுதாய வளைகாப்பு திட்டமாகும். சாதி மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணிப் பொர்களும் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர்.


மேலும், இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்ப கால பராமரிப்பு குறித்த தகவல்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு சென்றடைய செய்து, அவர்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறப்பதை உயர்த்துதல், குழந்தைகளின் பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மருத்துவமணையில் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், குழந்தைகளின் வளர்ச்சிப் படிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகப்பேறு உதவித் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள், இணை உணவின் அவசியம் குழந்தைகள் நோய்வாய் படும் போது அளிக்கப்பட வேண்டிய கவனிப்புகள் போன்ற பல விவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை ஆகும்.


அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இதுவரை சுமார் 1700 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வனைகாப்பு விழா சிறப்பான முறையில் நடைபெற்று சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் (17.10.2023), சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஈரோடு மாவட்டம், வொர்ளோடு பகுதியைச் சார்ந்த 70 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு, 70 கர்ப்பிணிப் பெளர்களுக்கு ஐவகை உணவுகளும் சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது.


கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையாக பொருட்களாக மஞ்சள், குங்குமம், வளையல், பேரிட்சை, பழவகைகள் மற்றும் 5 வகை உணவுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது, மேலும், அரசு மருத்துவமனைகளில் பயன்பெறும் கர்ப்பிணிப் பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.18,000/- மற்றும் ரூ.2,000/- மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் சுகாதாரத் துறையின் மூலம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், இந்நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து கண்காட்சி அமைத்து விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. 


அதே போன்று, கர்ப்பிணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் மகப்பேறு கால ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. இதனை கர்ப்பிணி பொர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு மற்றும் கர்ப்ப காலத்தில், மிகுந்த கவளமுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிகேறன் என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் திரு.வே.செல்வராஜ், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.காயத்ரி இளங்கோ, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் திருமதி.ஐ.பூங்கோதை, ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டணர்


- செய்தியாளர் ச. சக்திவேல்.

No comments:

Post a Comment