ஈரோட்டில் தொலைந்த செல்போன்களை கைப்பற்றி சம்பந்தப்பட்ட மனுதாரர்களிடம் ஒப்படைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ; - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 20 November 2023

ஈரோட்டில் தொலைந்த செல்போன்களை கைப்பற்றி சம்பந்தப்பட்ட மனுதாரர்களிடம் ஒப்படைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ;


ஈரோட்டில் தொலைந்த செல்போன்களை கைப்பற்றி  சம்பந்தப்பட்ட மனுதாரர்களிடம் ஒப்படைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ; 

ஈரோட்டில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனுதாரர்கள் ஈரோடு மாவட்டத்தில் தங்களது செல்போன் தொலைந்துவிட்டதாக கொடுத்த புகார்களின் அடிப்படையில், ஈரோடு மாவட்ட சைபர் செல் பிரிவின் மூலம் துரித நடவடிக்கை மேற்கொண்டதன் பேரில், இன்று 20.11.2023-ம் தேதி ரூ- 14,12,385/- (ரூபாய் பதினான்கு லட்சத்தி பனிரெண்டாயிரத்தி முன்னுாற்றி எண்பத்தி ஐந்து மட்டும்) மதிப்புள்ள 85 செல்போன்களை கைப்பற்றி சம்மந்தப்பட்ட மனுதாரர்களிடம் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு.ஜவகர்,இ.க.ப., அவர்கள் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து ஓப்படைத்தார். மேலும் ஈரோடு மாவட்ட சைபர் செல் பிரிவினர் 2023 - ல் ரூ.76,72,796/- (ரூபாய் எழுபத்து ஆறு லட்சத்து எழுபத்தி இரண்டாயிரத்தி எழு நூற்று தொண்ணூற்று ஆறு மட்டும்) மதிப்புள்ள மொத்தம் 507 செல்போன்களையும் மற்றும் 2022 - ல் ரூ-75,62,406/-(எழுபத்தி ஐந்து லட்சத்தி அறுபத்தி இரண்டாயிரத்தி நானூற்றி ஆறு மட்டும்) மதிப்புள்ள மொத்தம் 528 செல்போன்களையும் திறம்பட கண்டுபிடித்து ஏற்கனவே உரிய மனுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதை ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது

தமிழக குரல் செய்திகளுக்காக 

ச.சக்திவேல்

No comments:

Post a Comment