போராட்டமும் சிறையுமே கழித்து நூற்றாண்டு கண்ட தோழர் சங்கரய்யா மறைவு.!ஆதித்தமிழர் பேரவை யின் செவ்வணக்கம்.!! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 19 November 2023

போராட்டமும் சிறையுமே கழித்து நூற்றாண்டு கண்ட தோழர் சங்கரய்யா மறைவு.!ஆதித்தமிழர் பேரவை யின் செவ்வணக்கம்.!!

 


போராட்டமும் சிறையுமே கழித்து நூற்றாண்டு கண்ட தோழர் சங்கரய்யா மறைவு.!ஆதித்தமிழர் பேரவை யின் செவ்வணக்கம்.!!



பொதுவுடைமை போராளியும் மார்க்ஸிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தோழர் சங்கரய்யா (102) அவர்கள் தன் வயது முதிர்வின் காரணமாக  இறுதி மூச்சு நிறைவுற்றது அறிந்து மிகுந்த வருத்தம் கொள்கிறேன்.



1921-ல் மதுரையில் பிறந்த தோழர் சங்கரய்யா அவர்கள் தந்தை பெரியார்தலைமையேற்ற சுயமரியாதை இயக்கத்தின் மீது பற்று கொண்டு பொது வாழ்வில் ஈடுபட்டு தனது இறுதி மூச்சு வரை பொதுவுடைமைக் கொள்கையை தீவிர பிடிப்புடன் இருந்து வந்தார்.



இந்திய சுதந்திர போராட்டம், தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டம், விவசாயிகளுக்கான போராட்டம் என போராட்டமும் சிறையுமே வாழ்க்கையாகக் கழித்த தோழர் சங்கரய்யா அவர்கள்



தீக்கதிர் நாளிதழ் ஆசிரியராகவும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்வாகி பொதுவுடைமை கருத்துக்களையும் கோரிக்கைகளையும் சட்டப்பேரவையில் முன் வைத்து தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் தோழர் சங்கரய்யா அவர்களின் மறைவு இடதுசாரி கொள்கையாளர்களுக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல பெரியாரிஸ்ட், அம்பேத்கரிஸ்ட், முற்போக்காளார்கள், சனநாயகவாதிகள், மற்றும் தமிழ் மக்கள் அனைவருக்குமான பேரிழப்பாகும்



நூற்றாண்டு கண்ட முதுபெரும் தலைவரை இழந்துள்ள இத்தருணத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் செவ்வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



தமிழக குரல் செய்தியாளர் ; ச. சக்திவேல்

No comments:

Post a Comment