ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் பத்தாம் ஆண்டு துவக்க விழாவினை கட்சியினர் கோலாகலமாக கொண்டாடினர் ;
ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே.வாசன் அவர்களது அறிவுறுத்தலின்படி மாவட்ட செயலாளர் விஜயகுமார் அவர்களது முன்னிலையில், ஈரோடு பெறுந்துறை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று காலை கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர் பின்பு ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை, வழங்கினார் இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ், பொதுச்செயலாளர் ரபீக், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், வட்டார தலைவர் புவனேஸ்வரன் , எஸ்சி,எஸ்டி,பிரிவு தலைவர் கண்ணம்மா, மாணவர் அணி தலைவர் அன்புத்தம்பி, மாவட்ட நிர்வாகிகளான ஓகே. கதிர்வேல்,சின்னசாமி, பழனிசாமி, சின்னதுரை, கொற்றவேல், முன்னாள் எம் சி, பூந்துறை யுவராஜ், மகளிர் அணி தலைவி தமிழ்ச்செல்வி,மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment