மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் செயல்படுத்தப்படும் பணிக்கு பூமி பூஜை செய்தல் நிகழ்வு: - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 11 February 2024

மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் செயல்படுத்தப்படும் பணிக்கு பூமி பூஜை செய்தல் நிகழ்வு:

 


மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் செயல்படுத்தப்படும் பணிக்கு பூமி பூஜை செய்தல் நிகழ்வு:


         ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், புஞ்சை காளமங்கலம் ஊராட்சி, கணபதி பாளையம் நால்ரோடு அருகில் கல்லுக்குழி பகுதிக்கு செல்லும் சாலையை தார் சாலையாக  அமைக்கவும், கன்னுடையாம் பாளையம் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையினை தார் சாலையாக அமைக்கவும், கொடுமுடி வட்டம், பாசூர் சங்கிலி கருப்பராயன் கோவிலுக்கு செல்லும் வழியில் காளிங்கராயன் வாய்க்கால் கரையில் உள்ள சாலையை தார் சாலையாக அமைத்திடவும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் (2023-2024) இருந்து சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை  அந்தந்த பகுதிகளில் நடைபெற்றது. நடைபெற்ற நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி  கலந்துகொண்டு புதிய தார் சாலை அமைப்பதற்கான பணிகளை துவக்கி வைத்தார்கள். 


       இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கணபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி பொறியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை பொறியாளர், பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய தலைவர் டெக்கான் பிரகாஷ் மற்றும் நமது கட்சியின் நிர்வாகிகள், கொடுமுடி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


 தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன்

No comments:

Post a Comment