சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அருகே காட்டு யானைகள் கூட்டமாக ரோட்டை கடந்து சென்றதை கண்டு ரசித்த வாகன ஒட்டிகள் செல்போனில் படம் எடுத்தனர் - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 23 February 2024

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அருகே காட்டு யானைகள் கூட்டமாக ரோட்டை கடந்து சென்றதை கண்டு ரசித்த வாகன ஒட்டிகள் செல்போனில் படம் எடுத்தனர்

 


சத்தியமங்கலம் , பிப்.23 சத்தியமங்கலம் அடுத்த  பண்ணாரி அருகே  காட்டு யானைகள் கூட்டமாக ரோட்டை கடந்து சென்றதை கண்டு ரசித்த வாகன ஒட்டிகள்  செல்போனில் படம் எடுத்தனர் 




சத்தி புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் சிறுத்தைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், யானைகள் உள்ளிட்ட  வனவிலங்குகள் உள்ளன. வன விலங்குகள்  அவ்வப்போது  உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக தண்ணீர் உள்ள பகுதிகளுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் சத்தி -  பண்ணாரி ரோட்டில்  புதுகுய்யனூர் பிரிவு அருகே  மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கூட்டமாக காட்டு யானைகள், குட்டிகளுடன் கடந்து சென்றன. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை நிறுத்தி  கொண்டனர்.  யானைகள் கடந்து  செல்வதை ரசித்த வாகன ஓட்டிகள் தங்கள் செல்போன்களில் இந்தக் காட்சியை வீடியோவாக எடுத்தனர்.

No comments:

Post a Comment