200க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
ஈரோடு மாவட்டத்தில் அருள்மிகு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்களில் பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், குண்டம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஈரோடு அருள்மிகு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் திருக்கோவிலுக்கு கிருஷ்ணம்பாளையத்திலிருந்து ஈரோடு மாநகர 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் தீர்த்தம், மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கருங்கல்பாளையம், மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பார்க் வழியாக வந்து பெரிய மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. இந்த முளைப்பாரி ஊர்வலத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பெண்கள் கலந்துகொண்டு நடனமாடி தங்களது பக்தியை வெளிப்படுத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக ஈரோட்டில் இருந்தது கோபால்
No comments:
Post a Comment