ஈரோடு மாவட்டம்,கொடுமுடி ஒன்றியம் பாசூர் கிராமம் முக்குடிவேலம்பாளையத்தில் எழுந்தருளி அருள்பாவிக்கும் அருள்மிகு ஸ்ரீ பெரியகாண்டியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 6 April 2024

ஈரோடு மாவட்டம்,கொடுமுடி ஒன்றியம் பாசூர் கிராமம் முக்குடிவேலம்பாளையத்தில் எழுந்தருளி அருள்பாவிக்கும் அருள்மிகு ஸ்ரீ பெரியகாண்டியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

 


ஈரோடு மாவட்டம்,கொடுமுடி ஒன்றியம் பாசூர் கிராமம் முக்குடிவேலம்பாளையத்தில் எழுந்தருளி அருள்பாவிக்கும் அருள்மிகு ஸ்ரீ பெரியகாண்டியம்மன் ஆலயத்தில் மூலவராக ஸ்ரீ பெரியகாண்டியம்மன் மற்றும் ஸ்ரீ குன்னுடையான், தாமரை நாச்சியார், ஸ்ரீ பொன்னர், சங்கர், அத்தை பிள்ளை அத்தான், ஸ்ரீ மாயவர், ஸ்ரீ முத்தாயி, தங்காயி, பவளாயி, ஸ்ரீ கன்னிமார் சாமிகள்,   ஸ்ரீ மகாமுனி, மந்திரமுனி, சாம்புவன் மற்றும் காவல் தெய்வம் ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆகிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு யாக சாலைகள் அமைக்கப்பட்டு நான்கு கால பூஜைகளுடன் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது...

   

பாசூர் கிராமத்தில் உள்ள ஊர் பொதுமக்கள் அனைவரும் காவிரி ஆற்றிற்கு சென்று தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்து பெரியகாண்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்...

  

பாசூர் கிராமத்தில் உள்ள ஊர் பொதுமக்கள் அனைவரும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு பெரியகாண்டி அம்மன் அருள் பெற்று சென்றனர்...   

 

விழாவில் கலந்து கொண்ட ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் அருள் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது...

No comments:

Post a Comment