ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் ஸ்ரீ கமல கணபதி ஆலய கும்பாபிஷேகம்:
ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ கமல கணபதி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழாவில் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி கலந்து கொண்டார். கும்பாபிஷேக விழாவில் பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் திரு. கேசவ விநாயகம் , மாநில பொதுச் செயலாளர் திரு. ஏ. பி. முருகானந்தம், கோட்ட அமைப்பு பொதுச்செயலாளர் பாலகுமார் , மாவட்ட பார்வையாளர் பாயிண்ட் மணி , ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி. சி. வேதானந்தம் , தேசிய பொதுக்குழு உறுப்பினர் என்.பி. பழனிச்சாமி , முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.ஏ. சிவசுப்பிரமணியம் , மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.எம். செந்தில் , மாவட்டத் துணைத் தலைவர் குரு. குணசேகர் , பட்டியல் அணி மாவட்ட தலைவர் சக்திவேல் உட்பட கட்சியின் தேசிய, மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment