தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தேர்தல் பிரச்சாரம்:
ஈரோடு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் விஜயகுமார் க்கு சைக்கிள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. ஜி. கே. வாசன் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மொடக்குறிச்சி நால்ரோடு பகுதிக்கு வருகை தந்து பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தின் போது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி, பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி.சி. வேதானந்தம், பாராளுமன்ற அமைப்பாளர் என்.பி. பழனிச்சாமி, மற்றும் பாஜகவின் தேசிய, மாநில, மாவட்ட , ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
தமிழககுரல் இணையதள செய்தியாளர் கோபால்
No comments:
Post a Comment