கலெக்டர் அலுவலகத்தில் 30 மனுக்கள் வருகை ஈரோடு , லோக்சபா தேர்தல் நடத்தை விதியால் , ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமையில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது . அதேசமயம் மக்களிடம் இருந்து மனுக் களை பெறும் வகையில் , அலுவலக நுழைவு வாயிலில் புகார் பெட்டி வைத்து , தினமும் மனுக் களை சேகரிக்கின்றனர் .குறைதீர் கூட்டம் நடக்கும் நாளான நேற்று அலுவலக உதவியாளர் ஒருவரை நிறுத்தி , மனு வழங்க வருவோரை , பெட்டியில் போட்டு செல்லும்படி கூறினர் . பட்டா மாற்றம் , போலீஸ் நடவ டிக்கை , சொத்து தொடர்பான பிரச்னை என , 30 மனுக்கள் வரப்பெற்றதாக அலுவலர்கள் தெரி வித்தனர் .
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment