மின்சார ஒயர் பட்டு உடலில் தீக்காயம் ஏற்பட்டவருக்கு நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் ரூ.75000/- நிதி உதவி வழங்கினார்!!! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 May 2024

மின்சார ஒயர் பட்டு உடலில் தீக்காயம் ஏற்பட்டவருக்கு நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் ரூ.75000/- நிதி உதவி வழங்கினார்!!!



கோபிச்செட்டிப்பாளையம் அருகே தென்னை மரம் ஏறும் போது மின்சார ஒயர் பட்டு உடலில் தீக்காயம் ஏற்பட்டவருக்கு நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் ரூ.75000/- நிதி உதவி வழங்கினார்!!!


ஈரோடு மாவட்டம் ,  கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் கலராமணி பகுதியை சேர்ந்த மணிகண்டன்  தென்னை மரம் ஏறும் பொழுது மின்சார வயர் பட்டு  உடலில் தீ காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இதை கேள்விப்பட்ட தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர்  பொன் விஸ்வநாதன் நாடார் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற  சங்கத்தின் அவசர  உதவி திட்டம்  200 ரூபாய் திட்டம் மூலம்  சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள் பங்களிப்போடு  ரூபாய் 75,000/- மருத்துவ உதவி தொகையை தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார் நேரில் சென்று நலம் விசாரித்து அவரது மனைவியிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் கே டி கோவிந்தசாமி நாடார்,  மாநில துணைச் செயலாளர் அய்யாசாமி நாடார், தகவல் தொழில் நுட்ப அணி கலைநாடார், திருப்பூர் மாவட்ட தலைவர் ரகுபதி நாடார், ரமேஷ் நாடார்,   மணிகண்டனின் சகோதரர்கள் அசோக்,ரெகுபதி நாடார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


 தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment