சத்தியமங்கலத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது !!! - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 May 2024

சத்தியமங்கலத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது !!!



  

ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் வளாகத்தில்  மாவட்ட செயலாளர் பெரு. நடராஜன்  தலைமையில் நடைபெற்றது, 




கூட்டத்தில் மாநில இயற்கை விவசாயிகள் அணி மாநில துணை செயலாளர் மோகன், அமைப்புச் செயலாளர் ஜோதி அருணாச்சலம், மாவட்ட மகளிர் அணி செயலாளர்  ராஜேஸ்வரி, வேளாண் தொழில் முனைவோர் மன்றத்தின் மாநில செயலாளர் ஐந்துனை.வேலுச்சாமி, மாவட்ட பொருளாளர் மகேந்திரன், மாவட்ட தகவல் ஆர்வலர் அணி செயலாளர் கிரி, மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி, பவானிசாகர் ஒன்றிய செயலாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  மேலும் சங்கத்தின் பவானிசாகர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரவணன், சங்கத்தின் ஒன்றிய துணைச் செயலாளர் செந்தில்குமார் உட்பட 30 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்


1) சங்கத்தின் சத்தியமங்கலம் நகரச் செயலாளராக பெரியகுளம். குபேந்திரன் , சட்ட விழிப்புணர்வு அணி மாவட்ட செயலாளராக சாணார்பதி  சந்தோஷ் , பவானிசாகர் ஒன்றிய துணைச் செயலாளர் பனங்காட்டு பாளையம் நாகராஜ் நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,


2) பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் அதிகரித்து வரும் கல்குவாரிகள் மற்றும் அதன் விதி மீறல்கள், ஆகியவை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில சட்ட விழிப்புணர்வு அணி செயலாளர் சதீஷ்யிடம்   ஆலோசித்து துறைசார்ந்த அதிகாரிகளுக்கு மனு செய்து அதன் பின் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


3) ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் பகுதியில் விவசாய மின் இணைப்பு வேண்டி தட்கல் முறையில் பணம் செலுத்தி இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் மின் இணைப்பு கொடுக்கப்படாத காரணத்தால் அது குறித்து உரிய நடவடிக்கை வேண்டி போராடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


4) பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க கோரி வரும் 20 5 2024 அன்று பவானிசாகர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெறும் காத்திருப்பு போராட்டத்திற்கு பெருந்திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.


5) தற்போது எல்பீபி வாய்க்கால் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்க முற்படுவதை இக் கூட்டம் கண்டிப்பதுடன், எக்காரணம் கொண்டும் விவசாயிகளுக்கான மின் இணைப்பை துண்டிக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகளால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


 தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment