ஈரோட்டில் தமிழ் உலகம் அன்னலட்சுமி அன்னதான திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது
ஈரோட்டில் தமிழ் உலகம்அன்ன லக்ஷ்மி அன்னதான திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்துசனிக்கிழமை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை எதிரில் தமிழ் உலகம் அன்னலட்சுமி அன்னதான திட்டத்தின் கீழ் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டு 138 வாரம் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு அன்னதானத் திட்டம் நோயாளிகளுக்கும் மகப்பேறு சிகிச்சை பெறும் மகளிர்களுக்கும் சாலையோர பயணிப்போருக்கும் சுமார் 100 க்கும் மேற்பட்டோர்களுக்கு காலை சிற்றுண்டி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில் இனிப்பு பாக்கெட் வழங்கப் பட்டது.
இந்த அன்னதான நிகழ்ச்சியில் தமிழ் உலகம் அன்னலட்சுமி அன்னதானத் திட்டத்தின் தலைமை நிர்வாகிடி.ராமலிங்கம், ஆர்.மோகனபிரியா ராமலிங்கம், ஆர்.ஸ்ரீ வர்ஷன் தலைமையில் மும்பை பூபதி லோகநாதன் , காரைக்குடி பாண்டியன், செளதி அரேபியா செய்யது இப்ராஹிம், சென்னை சென்பகராஜன் , கனகராஜ், ஈரோடு மாரிமுத்து , பேராசிரியை ஆன்மிக சொற்பொழிவாளர் திருவண்ணாமலை ஆனந்தி சரவணன், ஆகியோர் முன்னிலையில்வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு சம்பத்நகர் ரவீந்திரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக"தாகம் தணிக்க தண்ணீர் தாரீர் அமைப்பினர்"வீரப்பன்சத்திரம் ஸ்ரீ ஆறுமுகவடிவு பல் மருத்துவமனை டாக்டர் ஹரிஹரசுதன்பணி நிறைவு மின்வாரிய கோட்ட பொறியாளர் எம். பெரியசாமி, குமலன் குட்டை மிராஸ்தர் வி.ஏ.குமாரசாமி, ஆசிரியை வனிதா, ஜெயம் மெட்டல் ஜெயக்குமார்,சம்பூர்ணம், பூங்கொடி, அருணா ரவீந்திரன்,பைக்பாயிண்ட் தேவா,சமூக ஆர்வலர் சமூக சிற்பி சம்பத்நகர் ரவீந்திரன் மூலம் இணைந்து வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு அன்னதான குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர் .
தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment