ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகரில் பவானிசாகர் அணை 70 அடிக்கு கீழ் வந்து நான்கு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது, எப்போதெல்லாம் தண்ணீர் குறைகிறதோ அப்போதெல்லாம் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி கொடுப்பது வழக்கம்..
ஆனால் தற்போது நான்கு ஐந்து மாதங்கள் ஆகியும் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை, இது குறித்து நமது சங்கத்தின் சார்பாக கடந்த 40 நாட்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பவானிசாகர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஆகியோருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டும் இன்னும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த நான்கு மாதமாக எடுத்திருந்தால் ஏராளமான வண்டல் மண் எடுத்து இருக்கலாம் தற்போது மழை காலம் துவங்க உள்ளதால் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து வந்துவிட்டால் வண்டல் மண் எடுக்க முடியாது. மேலும் வண்டல் மண் நீர் குறையும்போது மட்டுமே எடுக்க முடியும் . இந்த வாய்ப்பு ஏதாவது ஒரு வருடத்தில் மட்டும் கிடைக்கும் கடந்த எட்டு ஆண்டுகளாக கிடைக்காத வாய்ப்பு இந்த ஆண்டு கிடைத்துள்ளது. ஆகவே இன்னும் காலம் தாழ்த்தாமல் வண்டல் மண் எடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரி வருகின்ற 20-ம் தேதி திங்கட்கிழமை பவானிசாகர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment