ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகரில் நீர்வளத்துறை பவானிசாகர் அணை கோட்ட செயற்பொறியாளர் அருள் அழகனை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பெரு. நடராஜன் தலைமையில் சங்கத்தின் அமைப்புச் செயலாளர் ஜோதிஅருணாச்சலம், மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி, தகவல் ஆர்வலர் அணி மாவட்ட செயலாளர் கிரி, சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் சண்முகசுந்தரம், கோவை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துச்சாமி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் வேலுமணி, தேவராஜ், மாயன்,பிரகாஷ் ஆகியோர் சந்தித்து பேசினார்.
அப்போது வரும் புதன் கிழமை மாலைக்குள் வண்டல் மண் எடுப்பதற்கான அரசாணை மாவட்ட அரசிதழில் வெளியிடப்படும் என்று செயற்பொறியாளர் உறுதியளித்தார். தவறும் பட்சத்தில் அடுத்த நாளே போராட்டம் நடத்தப்படும் என்பதையும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தெளிவுபடுத்தினர்.
இதன்மூலம் வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்பதை உறுதியாக நம்பலாம்அல்லது அடுத்த நாளே போராட தயாராக இருக்கும் படி அனைத்து உழவர் உறவுகளையும் கேட்டுக்கொள்கிறோம்.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்,ஈரோடு வடக்கு மாவட்டம்.
தமிழக குரல் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட ஒளிப்பதிவாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment