ஈரோடு மாவட்டம்,கொடுமுடி வட்டம்,பாசூர் காந்தமலை ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது...
முருகபெருமானின் பிறந்த நாளை முன்னிட்டு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றது... சிறப்பான இராஜ அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்...
பொன்காளிவலசு சித்தர் சாமிகள் அவர்கள் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார்கள்...உற்சவ மூர்த்தி திருவீதி உலா மிகவும் சிறப்பாக நடைபெற்றது...வைகாசி விசாகத்தை முன்னிட்டு காந்தமலை ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் மொடக்குறிச்சி அனுசுயா தரணிபதி அவர்களின் முதல் வள்ளி குழு நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது...
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அருள் பிரசாதமும்,அன்னதானமும் வழங்கப்பட்டது...
தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்
No comments:
Post a Comment