ஈரோட்டில் மேட்டூர் சாலை வழியே பஸ்கள் , பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது .
ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு வாசுகி வீதி , அகில் மேடு வீதி வழியே தான் பஸ்கள் செல்ல வேண்டும் . அதுவும் காலை , 9 : 00 மணி முதல் மாலை , 5:00 மணி வரை மேட்டூர் சாலை வழியே பஸ் ஸ்டாண்டுக்கு பஸ் , லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் விதி மீறியதாக நேற்று முன்தினம் , 18 அரசு பஸ்கள் , ஏழு தனியார் பஸ்களுக்கு தலா , 500 ரூபாய் அப ராதம் விதிக்கப்பட்டது . இந்த நடவடிக்கை போலீஸ்- போக்குவரத்து தொழிலாளர் மோதலாக பார்க்கப்பட்டது . இந்நிலையில் மேட்டூர் சாலை துவங்கும் ஜி . ஹெச் . ரவுண்டானா பகுதியில் , பஸ்கள் மேட்டூர் சாலை வழியே பஸ் ஸ்டாண்ட் செல்ல அனுமதியில்லை என்று , நேற்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது . போலீசார் இந்த நடவடிக்கை வரும் நாட்களிலும் தொடர்ந்தால் , மேட்டூர் சாலையில் வாகன நெரிசல் குறைய வாய்ப்புள்ளது .
தமிழக குரல் செய்திகளுக்காக தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment