போலீஸ்காரர் டிஸ்மிஸ் : - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 May 2024

போலீஸ்காரர் டிஸ்மிஸ் :



 ஈரோடு எஸ்பி உத்தரவு ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில் முதல் நிலை காவலராக ( கிரேடு -1 ) பணியாற்றியவர் பூமாலை . இவர் , கடந்த 2009 ம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணிக்கு சேர்ந்தார் . பூமாலை கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ஜி பே மூலம் பண வசூலில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு , துறை ரீதியான முறையான விசாரணை மேற கொள்ளப்பட்டது .மேலும் , பூமாலை ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு மனைவி , குழந்தைகளை தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்தது உள்ளிட்ட தொடர் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்படத்தக்கது . இதற்கிடையில் , பூமாலை கடந்த ஏப்ரல் மாதம் 30 ம் தேதி மீண்டும் நம்பியூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிக்கு சேர்ந்தார்


 இந்நிலையில் , பூமாலை மீதான துறை ரீதியான விசாரணை நிறைவடைந்து , அறிக்கை எஸ்பி ஜவகருக்கு சமர்பிக்கப்பட்டது . இந்த அறிக்கையையின் அடிப்படையில் நேற்று பூமாலையை பணியில் இருந்து நிரந்தர பணி நீக்கம் செய்து ஈரோடு எஸ்பி ஜவகர் உத்தரவிட்டார் . ஈரோடு மாவட்டத்தில் போலீஸ்காரர் தொடர் ஒழுங்கீன நடவடிக்கையால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட சம்பவம் காவல் துறையில் பணியாற்றுபவர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment