ஈரோடு கொடுமுடி ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் குறுமைய கபாடி விளையாட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டி ஆண்களுக்கு, மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக நடைபெற்றன. ஆண்களுக்கான கபாடி போட்டியில் இளையோர் பிரிவில் 11 அணிகளும் மூத்தோர் பிரிவில் 11 அணிகளும் மிக மூத்தோர் பிரிவில் 9 அணிகளும் பங்கு பெற்றன. ஆண்களுக்கான கபாடி போட்டியில் ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்கள் பிரிவில் இளையோர் மூர்த்தோ மிக மூத்தோர் அணிகள் வெற்றிவாகை சூடினர். பெண்களுக்கான கபாடி விளையாட்டு போட்டியில் இளையோர் பிரிவில் 6 அணிகளும் மூத்தோர் பிரிவில் 4 அணிகளும் மிக மூத்தோர் பிரிவில் 4 அணிகளும் பங்கு பெற்றன.
ஊஞ்சலூர்அரசு மேல்நிலைப்பள்ளி பெண்கள் மூன்று வகையான அணிகளும் வெற்றிவாகை சூடினர். பூப்பந்து போட்டியில் மூத்தோர் பிரிவு மாணவிகளும் மிக மூத்தோர் பிரிவு மாணவர்களும் முதலிடம் பெற்றனர் மூத்தோர் பிரிவில் மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றனர். கேரம் போட்டியில் மூத்தோர் பிரிவு மிக மூத்தூர் இரட்டையர் பிரிவு போட்டியில் மாணவர்கள் வெற்றி வாகை பெற்றனர். பள்ளிக்குப் பெருமை சேர்த்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாட்சாயினி அவர்கள் பாராட்டினர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் மொடக்குறிச்சி புன்னகை
தூரன் ஆர் சங்கர்
No comments:
Post a Comment