தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கு இணங்க ஈரோடு மாவட்டம் வேளாண்துறை சார்பாக இயற்கை விதைகள் விற்பனை மற்றும் கருத்தரங்கு ஈரோட்டில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை , மதுவிலக்கு ஆயத் தீர்வை துறை அமைச்சர் சு . முத்துசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . அதனை தொடர்ந்து ஏ.ஈ.டி. பள்ளியில் வேளாண்துறை சார்பில் விவசாய இயந்திரங்கள் கண்காட்சியை பார்வையிட்டார் . பின்னர் கூட்டுறவுத் துறை சார்பாக மேட்டுக்கடை கதிரம்பட்டியில் புதிதாக கிளைகளை துவக்கி வைத்தார் . இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் , துணை மேயர் வி . செல்வராஜ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment