தமிழ்நாடு அனைத்து மின் பணியாளர் முன்னேற்ற நல சங்கம் மாநில அளவில் செயல்பட்டு வருகிறது.ஈரோடு மாவட்டம் சார்பாக தனியார் மஹாலில் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் சேகர், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் ராஜமாணிக்கம், அமைப்புச் செயலாளர் கனகராஜ், துணைத் தலைவர் ஆல்வின் ஜோசப் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது உறுப்பினர்களிடம் கருத்துகள் கேட்டு அதற்கு உண்டான விபரங்களையும் தெரிவித்தனர். மேலும் இந்த நலச் சங்கத்தில் இணையும் உறுப்பினர்களுக்கு வழங்கும் பல்வேறு சலுகைகள் பற்றியும் எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் பூபாலன்.
No comments:
Post a Comment