உரிய ஆவணங்களுடன் சான்று பெற்ற விதைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று துணை இயக்குநர் எச்சரித்துள்ளார் . இது குறித்து ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி , வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது , அனைத்து விதைகளும் அரசு சான்று பெற்ற விதைகளாக இருக்கும் பட்சத்தில் , முறையான கொள்முதல் பட்டியல் , விற்பனை பட்டியல் , விதை இருப்பு பதிவேட்டில் உரிய பதிவுகள் செயயப்பட்டு இருக்க வேண்டும் .வெளி மாநிலங்களில் இருந்து பெறப்படும் விதைகளுக்கு அந்த பகுதி விதை சான்றளிப்பு அலுவலரால் , கையொப்பமிட்ட படிவம் -2 சமர்பிக்க வேண்டும் . உண்மை நிலை விதை குவியல்களுக்கு , பதிவு சான்றிதழ் , முளைப்பு திறன் அறிக்கை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் . முறையான ஆவணங்களை பராமரிக்க தவறும் விதை விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .நெல் விதைகளை மூட்டையில் இருந்து பிரித்து சில்லறை விற்பனை செய்யக்கூடாது . விதை விற்பனை ரசீதில் பயிர் , ரகம் , குவியல் எண் , காலாவதி நாள் , விவசாயி பெயர் , முகவரி , தொலைபேசி எண் குறிப்பிட்டு , விவசாயி கையெழுத்து பெற்று விற்பனை செய்ய வேண்டும் . அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது . மீறினால் துறை ரீதியான நடவடிக்கை அல்லது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் . இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment