கோவை மாவட்டம் ஜோதிபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சண்முகவேல் . இவர் நேற்று செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் மன்னார்குடி வரை தன் குடும்பத்தினருடன் சென்று விட்டு மீண்டும் கோவை நோக்கி ரயிலில் சென்று கொண்டிருந்தார் . இவரை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் சண்முகவேலின் மனைவி வைத்திருந்த கைப்பை மற்றும் இரண்டு செல்போன்கள் உள்ளிட்டவைகளை திருடி விட்டு தப்பி சென்றார் . இது குறித்து அதிர்ச்சி அடைந்த சண்முகவேல் ஈரோடு இருப்புப் பாதை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஈரோடு ரயில்வே நிலையத்திற்கு வெளியே இருந்த பூங்காவில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்ததில் , திருநெல்வேலி மாவட்டம் ராமசாமிபுரம் பகுதியை சேர்ந்த சங்கர பாண்டியன் என்பதும் , சண்முகவேலின் உடைமைகளை திருடியதும் , இவர் மீது ஏற்கனவே சங்கரன்கோவில் சிவகாசி , தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது .உடனடியாக சங்கரபாண்டியனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து செல்போன்கள் மற்றும் நகைகளை மீட்டு ஈரோடு சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment