நூல் வெளியீட்டு விழா: - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 31 August 2024

நூல் வெளியீட்டு விழா:


கோவையைச் சேர்ந்த பிரபல இருதய மருத்துவ நிபுணர் டாக்டர். ஜே.கே. பெரியசாமி 

 எழுதிய  'துடிக்கின்ற நெஞ்சென்று ஒன்று'  என்ற நூல் வெளியீட்டு விழா சென்னிமலை அடுத்த முருங்கத்தொழவு, மாரியம்மன் கோவில் வளாகத்தில்  நடைபெற்றது. அஞ்சுராம் பாளையம் பகுதியைச் சார்ந்த டாக்டர். அர்ச்சுனசாமி  நினைவாக அவரது கிராமத்திலேயே இந்நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில்  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அம்மா  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் பதிப்பினை பெற்றுக்கொண்டு விழா பேருரை ஆற்றினார். மேலும் நிகழ்வில் அப்பகுதியைச் சார்ந்த பொது மக்களுக்கு இதயத்தின் பிரச்சினைகள் குறித்து விளக்கும் ஒரு முக்கியமான சொற்பொழிவு நடைபெற்றது. இதயத்தின் பிரச்சினைகள் மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதற்கான அறிவுரைகள் இதய மருத்துவ நிபுணர் டாக்டர் ஜே. கே. பெரியசாமி அவர்களால் வழங்கப்பட்டது. நடைபெற்ற நிகழ்வினை U.S.A - Help in foundation  டாக்டர். நர்மதா குப்புசாமி குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment