அதிகரிக்கும் கேன்சர் நோயாளிகள் எண்ணிக்கை - தமிழக குரல் - ஈரோடு

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 September 2024

அதிகரிக்கும் கேன்சர் நோயாளிகள் எண்ணிக்கை



ஈரோடு மாநகராட்சியில் நேற்று ( ஆக .30 ) மாமன்ற கூட்டம் நடந்தது . இதில் சிறப்பு அழைப்பாளராக , பிரகாஷ் எம் . பி பங்கேற்றார் . அப்போது கவுன்சிலர்கள் மத்தியில் அவர் பேசியதாவது : இந்தியாவிலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிக கேன்சர் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . என்னிடம் மருத்துவ பரிந்துரைக்காக வந்த 60 பேரில் , 40 பேர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் . இதில் , 2 வயது குழந்தையும் உள்ளது . குறிப்பாக , மாநகராட்சியில் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் .


 ஈரோடு ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்ட பிறகு , ரூ . 1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது . எதிர் வரும் காலங்களிலாவது , மாநகராட்சியில் வளர்ச்சித் திட்டப்பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் . மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான மண்டலத்தலைவர் , கவுன்சிலர்களுக்கு , மாநகராட்சி அதிகாரிகள் உரிய மரியாதை அளிக்க வேண்டும் . வார்டுகளில் நிலவு குறைகளை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அதிகாரிகள் ஒத்துழைத்தால் மட்டுமே , வருகிற 2026 தேர்தலின் போது , கவுன்சிலர்கள் வார்டுகளுக்குள் செல்ல முடியும் என அவர் பேசினார்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர்  செ.கோபால், ஈரோடு.

No comments:

Post a Comment