ஈரோட்டில் டெங்கு தடுப்பு பணியில் 350 கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் , தினசரி 15 ஆயிரம் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக , மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் தெரிவித்துள்ளார் . இதுகுறித்து அவர் கூறியதாவது : ஈரோடு மாநகராட்சியில் டெங்கு தடுப்பு 350 கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . தினசரி ஒரு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு 50 வீடு என்ற வீதத்தில் 4 மண்டலங்களிலும் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது . இதுதவிர , மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகதார பணியாளர்கள் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது .
கடந்த ஆண்டுகளில் டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் தொடர் கொசு ஒழிப்பு பணி மற்றும் சுகாதார பணிகளை கூடுதல் கவனம் செலுத்தி மேற்கொண்டு வருகிறோம் . பொது இடங்களிலும் இருக்கும் டயர் , தேங்காய் தொட்டிகள் போன்றவற்றையும் அகற்றி வருகிறோம் . பொதுமக்களும் தாமாக முன்வந்து வீடுகளிலும் , வீட்டின் சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும் . வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் நிரப்பும் பேரல்களை பிளிச்சிங் பவுடரை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் . இந்த கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்பு பணிக்கு மாநகராட்சியின் நடவடிக்கைக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
No comments:
Post a Comment